Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label சமயல் குறிப்புகள். Show all posts
Showing posts with label சமயல் குறிப்புகள். Show all posts

July 20, 2017

கொண்டை கடலை குருமா செய்ய தெரியுமா !


தேவையான பொருள்கள்:

வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/ 2 தேக்கரண்டி
சென்னா மசாலா தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி
மேத்தி இலை - சிறிது (காய்ந்த வெந்தய இலை)
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு

அரைக்க தெவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 100 கிராம்
முந்திரிப்பருப்பு - 5

தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 2
பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2

செய்முறை:

கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 4 அல்லது 5 விசில் வைத்து எடுத்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை இரண்டாகவும் கீறி வைக்கவும். தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் போடவும். பெருஞ்சீரகம் பொரிந்ததும்  பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாடை போகும்வரை வதக்கி பிறகு தக்காளியை சேர்க்கவும். பின்னர் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சென்னா மசாலா தூள், கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு  நிமிடம் கிளறி அதோடு அவித்து வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து கிளறவும்.

பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர்  வேக வைத்து மசாலா வாடை அடங்கியதும், தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கொத்தமல்லி, மேத்தி இலை சேர்த்து  கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான கொண்டைக்கடலை குருமா தயார்.

July 16, 2017

வீட்டிலேயே செய்திடலாம் பானி பூரி !


தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 100 கிராம்
ரவை - 50 கிராம்
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய் வற்றல் - 6
வெல்லம் - 10 கிராம்
உருளைக்கிழங்கு - 2
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தனியா - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
புதினா - சிறிது
எண்ணெய் - 250 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை அதற்குத் தேவையான அளவு உப்பு மூன்றையும் போட்டு ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் விட்டு பூரி மாவு போல் கெட்டியாக பிசைந்து ஒரு மணிநேரம் ஊற  வைக்கவும்.

ஊறியதும் மாவை சிறிய உருண்டைகளாகச் செய்து அப்பளமாக தேய்க்கவும். பானி பூரி மிகவும் சிறியதாகவும் ஒரே அளவுடனும் இருப்பது அவசியம். இதற்கு ஏதாவது ஒரு மூடியை வைத்து அழுத்திச் சிறு பூரிகளாக செய்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரியைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். பூரி நன்றாக உப்பி வரும். அதனை  எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.

குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்து அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின் மற்றொரு பாத்திரத்தில் புளி, உப்பு, வெல்லம் ஆகியவற்றைப் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கலந்து வைக்கவும். மிளகாய் வற்றல், தனியா, சீரகம் ஆகியவற்றைப் பொடி செய்துக் கொள்ளவும்.


புளிக்கரைசலில் மசாலா பொடி, புதினாவை அரைத்து அதன் சாறு எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். பூரியின் மத்தியில்  விரலால் ஒட்டை செய்து அதில் மசித்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து பின்னர் புளித்தண்ணீரை ஊற்றி மூன்றையும் சேர்த்துச் சாப்பிடவும். மிகவும் சுவையான பானி பூரி தயார்.

July 15, 2017

டேஸ்டியான க்ரீன் மீன் கறி குறைந்த நிமிடங்களில் செய்வது எப்படி?


இந்த ரெசிபி எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று. இதில் நிறைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் குழந்தைகளுக்கும் நல்லது. மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொத்தமல்லி இலைகளில் உள்ள பைடோநியூட்ரியன்ஸ் போன்றவைகள் நமது மூளைக்கு தேவையானவை.

நீங்க இதையையே ஒரு லைட்டான கறி டிஷ் செய்ய நினைத்தால் தேங்காய் தண்ணீர் போதுமானது. ஆனால் ரிச் டேஸ்ட் கறிக்கு கண்டிப்பாக 400 மில்லி தேங்காய் பால் மற்றும் 100 மில்லி தண்ணீர் தேவைப்படும். இந்த ரெசிபியை நீங்க எந்த வகையான ஒயிட் பிஷ் களிலும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள்

1-2 பச்சை மிளகாய் (விதையுடன் அல்லது விதைகள் இல்லாமல்)
1 கூடு பூண்டு
1 டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது
1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலைகள் தண்டுடன்
1 டேபிள் ஸ்பூன் வெஜிடபிள் ஆயில்
2 நறுக்கிய வெங்காயம் 500 மில்லி தேங்காய் தண்ணீர் ஷெஸ்ட்(லெமன் தோல்) மற்றும் ஒரு எலுமிச்சை ஜூஸ்
1 டேபிள் ஸ்பூன் பிஷ் சாஸ்
1/2 டேபிள் ஸ்பூன் பிரவுன் சுகர்
500 கிராம் தோலை நீக்கிய ஹேக் மீன் (காட் மீனின் ஒரு வகை), சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலைகள் போன்றவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும், வழுவழுவென்று அரைக்க கொஞ்சம் வெஜிடபிள் ஆயிலை தெளித்து தெளித்து அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்யை சூடேற்றி வெங்காயத்தை போட்டு 5 நிமிடங்கள், பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு அரைத்து வைத்த பேஸ்ட்டையும் கலந்து 2 நிமிடங்கள் வதக்கவும் .

தேங்காய் தண்ணீர், லெமன் ஜெஸ்ட்(zest), பிஷ் சாஸ் மற்றும் சுகர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு இதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும் .

இப்பொழுது அதனுடன் வெட்டிய மீன்கள் மற்றும் லெமன் ஜூஸ், உப்பு சேர்த்து மூடி விட வேண்டும். மிதமான தீயில் 3 நிமிடங்கள் மீன் நன்றாக வேகும் வரை வைக்க வேண்டும்.

வெதுவெதுப்பான சூட்டில் மீன்களை மட்டும் எடுத்து 4 பெளல்களில் நடுவே பிரித்து வைத்து தேங்காய் கிரேவியை சுற்றி ஊற்றி நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவ வேண்டும். கடைசியாக பச்சை பட்டாணியை சுற்றிலும் வைத்து அலங்கரியுங்கள்.

July 11, 2017

சத்தான, சுவையான ப்ராக்கோலி சப்பாத்தி செய்ய...!


தேவையான பொருட்கள்:

ப்ராக்கோலி - கால் கப்
இஞ்சி - சிறு துண்டு
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவைகேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில்  ப்ராக்கோலி சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கி ஆற விடவும்.

* மிக்சியில் ஆற வைத்த ப்ரோகோலி, இஞ்சி, இரண்டு டீஸ்பூன்  ப்ரோகோலி வேகவைத்த தண்ணீர், கொத்தமல்லி சேர்த்து விழுதாக  அரைத்து கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, உப்பு, அரைத்த விழுது,  தேவையான அளவு வடிகட்டிய தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி  மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் மாவை சப்பாத்திகளாக திரட்டி, மடித்து மறுபடியும் திரட்டி வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் உருட்டி  வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தது  திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான சத்தான ப்ராக்கோலி சப்பாத்தி ரெடி. இதற்கு தொட்டு கொள்ள தயிர் பச்சடி சுவையாக இருக்கும்.

July 10, 2017

சோறு மீதி இருக்கா ? சூப்பரா கட்லெட் செய்யலாம் ! வாங்க தெரிஞ்சுக்கலாம் !!


நீங்கள் எதிர்பார்த்த மழைக் காலம் வந்து விட்டது. கொஞ்சம் யோசித்து பாருங்க கொட்டும் மழையில் ஜில்லென்ற காற்றில் கையில் சூடான காபியுடன் காரசாரமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே மழையை ரசித்தால் எப்படி இருக்கும். என்னங்க இந்த மழைக்காலத்தில் உங்கள் நண்பர்களுக்காக வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்து இருக்கீங்களா. கவலையே வேண்டாம் நீங்கள் வீட்டிலேயே ருசியான கலர்புல்லான ரைஸ் கட்லட் செய்து கொடுத்து எல்லாரையும் அசத்திடலாம்.

இந்த ரைஸ் கட்லட் உங்கள் நாவிற்கு ருசியான ஸ்நாக்ஸ் என்பதால் கண்டிப்பாக உங்கள் மழைக்காலத்தை இதுவரை நீங்கள் கண்டிராத புது அனுபவமாக மாற்றி விடும். இதுவரை ரைஸ் மிச்சமாகி விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்திருப்பீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் எளிதாக ரைஸ் கட்லட் செய்து விட முடியும்.

கண்டிப்பாக இந்த ஸ்நாக்ஸ் உங்கள் வீட்டு குழந்தைகளையும் ருசிபார்க்க வைத்து விடும். மற்ற சிப்ஸ் போன்றவற்றை விட இது மிகவும் ஆரோக்கியமானது. இதனுடன் சட்னி சேர்த்து பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.

என்னங்க இப்பவே சாப்பிடனும் போல தோனுதா சரி சரி வாங்க இந்த ரைஸ் கட்லட் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பரிமாறும் எண்ணிக்கை :10 கட்லட்

தயாரிக்கும் நேரம் :15 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் :10 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

சமைக்கப்பட்ட சாதம் - 1கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1(தோலுரித்து மசித்து கொள்ளவும்)
காய்கறிகள் (பச்சை பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயத் தாள், சிவப்பு மற்றும் மஞ்சள் குடை மிளகாய் மற்றும் கேரட்) - 1கப் (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 1(நறுக்கியது)
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/4 "டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - கொஞ்சம்
சீரகப் பொடி-1/2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மக்காச் சோள மாவு-1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் (பொரிப்பதற்கு)

செய்முறை : 1. ஒரு பெளலை எடுத்து எண்ணெய்யை தவிர மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கலக்க வேண்டும்.
2. கையை வைத்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அப்போது தான் அதன் பதம் தெரியும்.
3. இப்பொழுது டேஸ்ட் பார்த்துக் கொண்டு உப்பு, காரம் வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளலாம்.
4. சாதம் நன்றாக மசித்து இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
5. ஒரு தட்டில் சிறிது மாவை தூவி விட வேண்டும்.
6. இப்பொழுது நாம் செய்து வைத்த கலவையை கொண்டு டிக்கிஸ் தயாரிக்க வேண்டும். அதாவது கலவையை சிறிது எடுத்து உருட்டி தட்டையாக கட்லட் வடிவத்தில் தட்ட வேண்டும். இது தான் டிக்கிஸ். இந்த டிக்கிஸை மாவு தூவப்பட்ட தட்டில் வைத்து கொள்ளவும்.
7. வாணலியை பற்ற வைத்து அதில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
8. எண்ணெய் மிதமாக சூடானதும் டிக்கிஸை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்க வேண்டும்.
9. டிக்கிஸ் நன்றாக பொரிய இருபக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.
10. பொன்னிறமாக வரும் வரை திருப்பிக்கிட்டே இருக்க வேண்டும்.
11. ஒரு தட்டை எடுத்து எண்ணெய்யை உறிய டிஸ்யூ பேப்பர் விரித்து கொள்ளுங்கள்
12. இப்பொழுது அந்த தட்டில் பொரித்த கட்லட்டை வைக்கவும்.
13. சுவையான ரைஸ் கட்லட் ரெடி

இந்த கட்லட்டுடன் சாஸ் அல்லது கொத்தமல்லி மற்றும் புதினா சட்னி தொட்டு சாப்பிட்டால் ரொம்ப ருசியாக இருக்கும். கவனத்தில் வைக்க வேண்டியவை தட்டில் மாவை தூவி அதன் மேல் கட்லட்டை வைப்பது முக்கியம்.

இது கட்லட் தட்டில் ஒட்டாமல் இருக்க உதவுகிறது பேசன் மாவிற்கு பதில் நீங்கள் வறுத்த பொரி கடலை மாவை கூட பயன்படுத்தினாலும் கட்லட் நன்றாக வரும்.

இன்னும் சுவையாக மணமாக கட்லட் இருக்க வேண்டும் என்று நினைத்தால் பொரிப்பதற்கு நெய் பயன்படுத்தவும். உடல் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்தியும் செய்யலாம் என்னங்க ரெடியாகி விட்டீங்களா உங்க வீட்லயும் கட்லட் செய்து அசத்துவதற்கு.

July 6, 2017

வெயிலுக்கு சூப்பர் ரெஸிபி: உங்களுக்கு மாம்பழ லட்டு செய்யத் தெரியுமா?


கோடை காலம் என்றால் கொளுத்தும் வெயில் மற்றும் வேர்வையை பிரச்சனைக்கு மட்டும் பேயர் பெற்றது அல்ல. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பழங்கள் கிடைக்கும் சீசனாக இருக்கும். வெயில் காலமானது மாம்பழத்திற்கான சீசனாக உள்ளது. பழங்களின் ராஜாவாகிய மாம்பழம் கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும்.

கோடை வெயிலில் சுற்றி வேலை பார்த்துவிட்டு களைத்துப் போய் வீட்டிற்கு வந்து, ஒரு டம்ளர் மாம்பழ லஸ்ஸி குடித்தால் அத்தனை களைப்பும் பறந்துப் போய்விடும். மாம்பழத்தை வைத்து நிறைய ரெசிபிகளை செய்யலாம்.

மாம்பழம் மட்டுமல்ல மாங்காயை வைத்து கூட நிறைய சமையல் செய்யலாம். மாங்காயை வைத்து பொதுவாக அனைவரும் ஊறுகாய் தான் செய்வார்கள். ஆனால், மாம்பழத்தை வைத்து நிறைய இனிப்புகள் மற்றும் ஜூஸ்கள் செய்யலாம்.

மாம்பழத்தை வைத்து பொதுவாக லஸ்ஸி மற்றும் ஷேக் செய்வார்கள். நீங்கள் மாம்பழ லட்டு சாப்பிட்டதுண்டா? இது தனி சுவை கொண்ட இனிப்பு வகையாகும். இதில் தேங்காய் மற்றும் மாம்பழ உள்ளதால் சுவை பிரமாதமாக இருக்கும்.

வாருங்கள் இப்போது நாம் மாம்பழ லட்டு செய்வதற்கு தேவையானப் பொருட்களைப் பற்றியும் செய்யும் பற்றியும் விரிவாக பார்ப்போம்...

தேவையானப் பொருட்கள் :
மாம்பழ கூழ் - 1/2 கப்
சுண்டக் காய்ச்சிய பால் - 1/2 கப்
தேங்காய் பவுடர் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
நட்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

ஸ்டெப் -1 இந்த ரெசிபியை செய்ய அடி கனமாக உள்ள பாத்திரத்தை உபயோகப்படுவது சிறந்தது. அடுப்பில் அந்தப் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் பவுடரை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

ஸ்டெப் - 2 இந்தக் கலவையுடன் சுண்டக் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி கலக்க வேண்டும். நல்ல பதத்தில் அதாவது சிறிது கெட்டியாக லட்டு பிடிக்க ஏதுவான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

ஸ்டெப் - 3 இறக்கி வைத்த இந்தக் கலவை ஆறிய பின் சிறிது சிறிது உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டில் சிறிது தேங்காய் பவுடரை தூவிக் கொள்ளுங்கள். அந்த பவுடர் மீது செய்து வைத்த உருண்டைகளை உருட்டி எடுத்தால் சுவையான மாம்பழ லட்டு ரெடி...

July 4, 2017

சூப்பரான மட்டன் சூப் செய்வது எப்படி


 தேவையான பொருட்கள் :

மட்டன் (மார்க்கண்டம்) -1/4 கிலோ
மிளகு -1/2 ஸ்பூன்
வெங்காயம் – 1/2 (அரிந்தது)
தக்காளி -2
அரிசி - 1 கைப்பிடி
காய்ந்த மிளகாய் -2
இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு எண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயம் கருவேப்பிலை - தாளிக்க

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மட்டனைச் சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி, அரிசி, காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் தேவையான நீர் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.

* வெந்ததும் நீரை வடித்துக் கொள்ளுங்கள்.

* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பெருங்காயம் கருவேப்பிலை போட்டுத் தாளித்து தனியே வடித்து வைத்திருக்கும் நீரை இதில் கொட்டிக் கொதிக்க விட்டு இறக்குங்கள்.

* சூடான மட்டன் சூப் ரெடி.

June 29, 2017

சிறுநீரகப் பிரச்சனையை தீர்க்கும் வாழைத்தண்டு பச்சடி


தேவையான பொருட்கள் :

தயிர் - ஒரு கப்
வாழைத்தண்டு - 300 கிராம்
கொத்தமல்லித் தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

* கொத்தமல்லி, வாழைத்தண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்

* தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கடைந்த தயிரை ஊற்றி அதில் நறுக்கிய கொத்தமல்லி, வாழைத்தண்டு, உப்பை போட்டு நன்றாக கலந்து பரிமாறவும்.

* சத்தான வாழைத்தண்டுப் பச்சடி ரெடி.

பலன்கள்:

வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குடலில் உள்ள கழிவைச் சுத்தப்படுத்தி வெளியேற்றும். உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாவைப் பாதுகாக்கும். சிறுநீரகக் கல், பித்தப்பையில் உள்ள கல்லைக் கரைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு உண்டு. மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்சனையைச் சரிசெய்யும்.

June 28, 2017

எப்படி சுவையான ரவா இட்லி வீட்டிலேயே தயார் பண்ணலாம் !


நீங்கள் தென்னிந்திய உணவுகளின் சுவைக்கு ரசிகர் என்றால், இட்லி, நிச்சயமாக உங்களின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கும். நீங்கள் ஒரு ஆரோக்கியமான காலை அல்லது மாலை சிற்றுண்டியை தேடுகின்றீர்கள் எனில் இட்லி உங்களுக்கான உணவு ஆகும்.

நீங்கள் இட்லி செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும் என நினைத்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ரவா இட்லி செய்முறை மிகவும் எளிதானது மற்றும் இதை மிகக் குறைந்த நேரத்தில் தயாரித்து விட முடியும்.

இதை சுமார் 10-12 நிமிடங்களில் தயாரித்து விட முடியும். காலை அல்லது மாலை நேரத்தில் நீங்கள் அவசரத்தில் இருக்கும் பொழுது, உங்களின் உறவினர்களுக்கு தேவையான உணவை தயாரிக்க இந்த ரவா இட்லி உங்களுக்கு கை கொடுக்கும்.

காலை அல்லது மதிய உணவிற்கு உங்களின் குழந்தைகளுக்கு நீங்கள் இதை தயார் செய்து கொடுக்கலாம். இது மிகவும் ஆரோக்கியமானது. எனவே இந்த எளிய ரவா இட்லியை எவ்வாறு செய்வது? அதற்கான செய்முறையைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

பறிமாறும் அளவு - 5 இட்லி
தயாரிப்பு நேரம் - 15 நிமிடங்கள்
சமையல் நேரம் - 10 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:
இட்லி மாவுக்கு
1. ரவை - 1 கப்
2. தயிர் - ¼ கப்
3. கொத்தமல்லி இலை - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
4. உப்பு - தேவைக்கு ஏற்ப

மற்ற பொருட்கள்
5. எண்ணெய் - 1 தேக்கரண்டி
6. நெய் - ½ தேக்கரண்டி
7. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
8. கடுகு - ½ தேக்கரண்டி
9. முந்திரி - 1 டீஸ்பூன் (உடைத்தது)
10. சீரகம் - ½ தேக்கரண்டி
11. கறிவேப்பிலை - 4
12. பச்சை மிளகாய் - 2 தேக்கரண்டி (நறுக்கியது)
13. பெருங்காயம் - ஒரு சிட்டிகை

செயல்முறை:

1. ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அதில் ரவா, தயிர், மற்றும் உப்பு சேர்க்கவும். இப்போது, மிகவும் மெதுவாக இந்தக் கலவையுடன் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும். இந்தக் கலவை இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை இந்த நடைமுறையைப் பின்பற்றவும்.

2. இப்போது, தாளிதம் செய்யும் நேரம். ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து வெப்ப மூட்டவும். அதன் பின்னர் அதில் சிறிது எண்ணெய், மற்றும் வெண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடான பின்னர் அதில் கடுகு, உளுந்து, கறி வேப்பிலை, முந்திரி, சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். இவை அனைத்தும் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

3. தாளித்த பொருட்கள் அனைத்தும் தயாரான உடன், இதை மாவு கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பின்னர் அதில் சிறிது தண்ணீர் தெளித்து கலக்கவும். இப்பொழுது மாவு கலவை நன்கு பொங்கி வர ஆரம்பிக்கும். அதன் பின்னர் மாவு கலவையை நன்கு கலக்கவும்.

4. இப்போது, உங்களுடைய இட்லிதட்டை எடுத்து அதில் எண்ணெய் தடவி அதில் இட்லி மாவை ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

5. பொதுவாக ரவா இட்லி வேக சுமார் 7-8 நிமிடங்கள் பிடிக்கும். இட்லி வெந்த பின்னர் அதை ஒரு கரண்டியால், நெம்பி இட்லியை வெளியே எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.

6. இப்பொழுது உங்களுடைய சூடான ரவா இட்லி பறிமாற தயாராக உள்ளது. நீங்கள் இந்த இட்லியை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி உடன் பரிமாற முடியும்.

இந்த அற்புதமான ரவா இட்லி செய்முறையை வீட்டில் முயற்சி செய்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

June 20, 2017

கோதுமை கேரட் அடை


தேவையான பொருட்கள் :

முழு கோதுமை - 200 கிராம்
பச்சரிசி - 150 கிராம்
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 12
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
துருவிய கேரட், முட்டை கோஸ் - அரை கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* முழு கோதுமையை 10 மணி நேரம் ஊறவைக்கவும்.

* பச்சரிசி, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் இவற்றை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

* இவற்றை ஊறிய கோதுமையுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

* அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயம், சீரகம், துருவிய கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றைச் சேர்த்துக் நன்றாக கலக்கவும்.

* தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை அடையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

* தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

May 18, 2017

சூப்பரான கேரளா ஸ்டைல் இறால் தீயல்


குழந்தைகளுக்கு இறால் மிகவும் பிடிக்கும். இன்று இறாலை வைத்து சூப்பரான கேரளா ஸ்டைல் இறால் தீயல் செய்வது எப்படி என்று பாக்கலாம்.


தேவையான பொருட்கள் :

இறால் - 1 கப்
வெங்காயம் - 200 கிராம்
புளிக்கரைசல் - கால் கப் ( கெட்டியாக)
பெருங்காயத்தூள் - 1/4  டீஸ்பூன்
வெந்தயப் பொடி- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்,
தனியாதூள் - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்  - 5
பூண்டு - 10 பல்
உப்பு - சுவைக்கேற்ப
தேங்காய் துருவல் -  1 கப்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள்  - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு  - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

* இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* வெங்காயம், கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, மிளகு, சின்ன வெங்காயம், தேங்காய், மிளகாய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து அதனுடன், மிளகாய்த்தூள், தனியாதூள் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், உப்பு, பூண்டு சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், இறால் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

* அரைத்த மசாலாவை இறால் குழம்பில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கடாயை மூடி வேக வைக்கவும்.

* குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

* கேரளா ஸ்டைல் இறால் தீயல் குழம்பு ரெடி!

* சூடான இறால் தீயல் குழம்பை சாதம், அப்பளம், தோசை உடன் சாப்பிடலாம்.

April 29, 2017

சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்


சளி, இருமல், தலை பாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் வைத்து குடிக்கலாம். இன்று இந்த காரசாரமான நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


ரசப்பொடிக்கு தேவையான பொருட்கள் :
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மல்லி (தனியா) - 3 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
சின்னவெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துச் சூடாக்கி மிளகு, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், மல்லி (தனியா) ஆகியவற்றை தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடிக்கவும். கடைசியாக இதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை ஒன்றாகச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் ரசப்பொடி ரெடி.

தேவையான பொருட்கள் :

நண்டு - ஒரு கிலோ
தக்காளி - 3
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
புளிக்கரைசல் - கால் கப்
தண்ணீர் - 4 கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

* தக்காளியை அரைத்து கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து, சுத்தம் செய்த நண்டுடன் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

* அடிகனமான மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை  சேர்த்துத் தாளிக்கவும்.

* அடுத்து அதில் தயார் செய்த ரசப்பொடியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.

* பிறகு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் வேகவைத்த நண்டு மற்றும் அதன் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

* உப்பு, காரம், புளிப்பு சரி பார்த்து தீயை மிதமாக்கவும். ரசம் நுரைகூடி வரும்போது கொத்தமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

* சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம்.

* சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் தரும். ரசத்தை சாப்பிடும்போது அதில் ஊறிய நண்டைச் சுவைக்க அருமையாக இருக்கும்.

சுவையான மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி


பிரியாணிகளில் பலவகைகள் உண்டு. அவற்றில் உலகத்திற்க்கே பிரியாணி ரெசிபியை உருவாக்கிய
மொகல் இளவரசி மும்தாஜ் தான் என்பது வரலாறு
 மொகல் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மட்டன் - 1 கிலோ
பாசுமதி அரிசி - 3 கப்
தயிர் - 1 1/2 கப்
வெங்காயம் - 4 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 1/2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா - 1 டீஸ்பூன்
பட்டை - 2
மிளகு - 6
கிராம்பு - 5
ஏலக்காய் - 5
பிரியாணி இலை - 1
குங்குமப்பூ - 1 சிட்டிகை (பாலில் ஊற வைத்தது)
முந்திரி - 15
உலர் திராட்சை - 20
நெய் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மட்டனை பொடியாக நறுக்கி நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* கழுவி மட்டனில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின் பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட வேண்டும்.

* பிறகு அதில் ஊற வைத்துள்ள மட்டனை போட்டு 5 நிமிடம், வதக்க வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து மட்டனை வேக வைக்க வேண்டும்.

* மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் முந்திரி, உலர் திராட்சையை போட்டு தீயை குறைவில் வைத்து வதக்கி விட்டு, பாசுமதி அரிசியை நீரில் கழுவி குக்கரில் போட்டு, அரிசியை 5 நிமிடம் வறுக்க வேண்டும்.

* இந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் உள்ள மட்டனானது பாதி அளவு வெந்து கிரேவி பதத்தில் இருக்கும்.

* இப்போது மட்டன் கிரேவியை குக்கரில் அரிசியுடன் சேர்த்து நன்றாக பிரட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.

* மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் பாலில் ஊறவைத்த குங்குமப்பூ, நெய்யை மேலே ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும்.

* சுவையான மொகல் பிரியாணி ரெடி.

April 27, 2017

வெயிலுக்கு உகந்த உணவு: கத்தரிக்காய் புளிக்கோசு


என்னென்ன தேவை?

கத்தரிக்காய் (பெரியது) - 2

புளி - சிறிய எலுமிச்சை அளவு

மிளகாய் வற்றல் - 3

பச்சைமிளகாய் - 2

கடுகு - அரை டீஸ்பூன்

உளுந்து, கடலைப் பருப்பு – தலா 1 டீஸ்பூன்

பெருங்காயம் – சிறிய கட்டி

இஞ்சி - சிறு துண்டு

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கத்தரிக்காய் மேல் லேசாக எண்ணெய் தடவி அடுப்பில் சுட்டெடுங்கள். ஆறியதும் தோலை நீக்கிவிட்டு நன்கு மசித்துக்கொள்ளுங்கள். புளியோடு உப்பைச் சேர்த்துக் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேருங்கள். பின்னர் புளிக் கரைசலை ஊற்றி, பச்சை வாசனை போனதும் மசித்து வைத்துள்ள கத்தரிக்காய் விழுதைப் போட்டு கொதிக்கவிடுங்கள். சிறிது நேரம் கழித்து, கெட்டியானதும் இறக்கிவைத்து கொத்தமல்லி தூவினால் கத்தரிக்காய் புளிக்கோசு தயார்.

April 26, 2017

வீட்டிலேயே செய்யலாம் "பீட்ஸா தோசை"


 தோசை என்றால் குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அந்த தோசையில் காய்கறிகள் சீஸ் போட்டு பீட்ஸா போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


தேவையான பொருட்கள் :

தோசை மாவு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
தக்காளி1 - 1
காளான் - 3
தக்காளி சாஸ் - இரண்டு டேபிள்ஸ்பூன்
சீஸ்(துருவியது) - இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்



செய்முறை :

* வெங்காயம், குடமிளகாய், தக்காளி, காளானை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சீஸை துருவிக்கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி, காளான் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.

* அடுத்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு கரண்டி மாவை சற்று கனமாக ஊற்றவும்.

* தோசை அரைவேக்காடு வெந்ததும், அதன் மேற்புறத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தக்காளி சாஸை ஊற்றி பரப்பி விடவும்.

* அடுத்து அதில் மேல் வதக்கிய காய்கறிகளை பரப்பி விடவும்.

* கடைசியாக துருவிய சீஸையும் மேலே தூவி பரப்பிவிட்டு வேகவிடவும்.

* சீஸ் உருகியதும் பீட்ஸா தோசையை எடுத்து சூடாகப் பரிமாறலாம்.

April 24, 2017

சிம்பிளான... செட்டிநாடு இறால் குழம்பு


உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா? விடுமுறை நாட்களில் இறாலை சுவையாக சமைத்து சாப்பிட ஆசையா? அப்படியெனில் செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பை செய்து சுவையுங்கள். அதன் செய்முறையை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சரி, இப்போது அந்த செட்டிநாடு இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)
வறுத்து அரைப்பதற்கு...
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2-4
குழம்பிற்கு...
சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலியில் போட்டு வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின் மசாலா பொடிகள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து அத்துடன் உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் இறாலை சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!

April 22, 2017

சூப்பரான டிபன் " பாஜ்ரா பூரி"


மாலையில் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமாக டிபன் செய்து கொடுக்க நினைத்தால் பாஜ்ரா பூரி செய்து கொடுக்கலாம். இந்த பூரி காரசாரமாக சாப்பிட சூப்பராக இருக்கும்.


தேவையான பொருட்கள் :

கம்பு மாவு - 2 கப்,
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்,
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
மாங்காய்த் தூள் - 1 டீஸ்பூன்,
வெந்தயக்கீரை - 2 கட்டு
பொடித்த சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிது,
இஞ்சி, பூண்டு விழுது - தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு, தண்ணீர், பொரிப்பதற்கு எண்ணெய் - தேவைக்கு,
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியாத் தூள் - 1/2 டீஸ்பூன்.



செய்முறை :

* வெந்தயக்கீரையை காம்பு இல்லாமல் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, வெள்ளை எள், சீரகத் தூள், மாங்காய்த் தூள், வெந்தயக்கீரை, பொடித்த சர்க்கரை, மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* கலந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து, அதன் மேல் எண்ணெய் 1 டீஸ்பூன் தடவி மூடி 15 நிமிடங்கள் வைக்கவும்.

* பின் மாவை எடுத்து உள்ளங்கையில் எண்ணெய் பூசிக் கொண்டு நன்கு உருட்டவும்.



* பிசைந்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கை கொண்டு பூரி மாதிரி கையில் மெல்லியதாக பூரிகள் தட்டவும். இந்த பூரிகள் கட்டையால் உருட்டக்கூடாது.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொறு பூரிகளாக போட்டு பொரிக்கவும். கரண்டி கொண்டு அழுத்தியும் அதன் மேல் எண்ணெயை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றியும் பொரித்து எடுக்கவும். திருப்பிப் போட்டு பொரித்து எடுத்து வடித்து பரிமாறவும்.

* சூப்பரான பாஜ்ரா பூரி ரெடி.

* இந்த பூரிக்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தயிர் பச்சடி, உருளைக்கிழங்கு மசாலா வைத்து சாப்பிடலாம்.

April 18, 2017

இறால் சில்லி 65 - படத்தை பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுதே!


தேவையான பொருட்கள்:

இறால் - 20

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

மசாலாவிற்கு

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

கரம் மசாலா - 2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

சோள மாவு - 14 கிண்ணம்

கொத்துமல்லி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - சிறிது

செய்முறை: முதலில் இறாலை  தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்து  எடுத்துக் கொண்டு அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவிற்கு கொடுத்துள்ளவற்றை சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடேற்றி இறால் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இறால் சில்லி 65 ரெடி

April 17, 2017

சீரக சிக்கன் ஃப்ரை செய்வது எப்படி


என்னென்ன தேவை?

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2  
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
சிக்கன் - 500 கிராம்
தண்ணீர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - தேவையான அளவு


எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி சீரகம் சேர்த்து பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். சீரகத் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி சிக்கன் துண்டுகளைப் போட்டு டாஸ் செய்யவும். இப்போது உப்பு மற்றும் சிறிது தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் வேக விடவும். சிக்கன் நன்கு சுருண்டு வரும்போது எலுமிச்சை சாறு சிறிது விட்டு இறக்கவும்.

April 16, 2017

மனமனக்கும் மட்டன் சுக்கா



என்னென்ன தேவை?

மட்டன் - கால் கிலோ

வெங்காயம் - 1

இஞ்சி – சிறு துண்டு

பூண்டு - 6 பல்

பட்டை, கிராம்பு - சிறிதளவு

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

தனி மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

முந்திரி – 10

சோம்பு – அரை டீஸ்பூன்

தேங்காய் - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுது, மிளகாய்த் தூள், மிளகுப் பொடி, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைக் கறியோடு நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் ஐந்து விசில் வரும்வரை வேகவிடுங்கள்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை போட்டுத் தாளியுங்கள். வேகவைத்த கறியை அதில் சேர்த்து நன்றாகச் சுருண்டு வரும்வரை வதக்குங்கள். வறுத்த முந்திரி, தேங்காய்த் துண்டுகளைச் சேருங்கள். சிறிதளவு கொத்தமல்லி, கறிவேப்பிலையைச் சேர்த்து இறக்கிவையுங்கள். சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுக்கு இதைத் தொட்டுக்கொள்ளலாம்.